‘காங்கிரஸ் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்’... புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 7:42 PM IST
Highlights

அதன் பின்னர் புதுச்சேரி புறப்படுச் சென்ற பிரதமர் மோடி, அங்கு கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரே உள்ள ஏ.எஃப்டி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.  

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த 13 வேட்பாளர்களை அறிமுகத்திய பிரதமர் மோடி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். இதில் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். தாராபுரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி: தமிழகத்தின் பெண்களை இழிவுப்படுத்துவதே திமுக - காங்கிரஸின் அந்த முக்கிய ஏவுகணையாக உள்ளது. அவர்களுக்கு பெண்களை இழிவுப்படுத்துவதே நோக்கமாக உள்ளது.

நான் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒன்று சொல்கிறேன்... நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள், இதுபோன்ற செயலை அவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக தலைவர்கள் இழிவுப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. கடவுளே, ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெண்களின் நிலை என்னவாகும், அவர்கள் பெண்களை இன்னும் அவமதிப்பார்கள், இழிவுப்படுத்துவார்கள் என காரசாரமாக திமுகவை வெளுத்து வாங்கினார். 

அதன் பின்னர் புதுச்சேரி புறப்படுச் சென்ற பிரதமர் மோடி, அங்கு கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரே உள்ள ஏ.எஃப்டி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.  இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பொதுச்செயலாளர் செல்வம், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

புதுச்சேரியில் உரையாற்றிய பிரதமர் மோடி: முந்தைய புதுச்சேரி  காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளிலும் ஊழல் இருந்தது. எனக்கு அரசியலில் நீண்ட அனுபவம் உண்டு. இதுவரை பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால் தற்போது நடைபெற உள்ள புதுச்சேரி தேர்தல் புதுமையானது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. மக்களின் தேவை தான் எங்களின் வாக்குறுதி, எங்களின் நோக்கம் தெளிவாக உள்ளது. புதுச்சேரிக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை மேற்கொள் காட்டி பேசிய பிரதமர், மீன்வளத்துறையை மேம்படுத்த 
ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.                                                                               

tags
click me!