சீன அதிபரை விழுந்து விழுந்து கவனிக்கும் மோடி... உட்கார வைத்து எண்ண கொடுத்தார் தெரியுமா..?

By vinoth kumarFirst Published Oct 11, 2019, 6:29 PM IST
Highlights

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கி கூறிய பின்னர், ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடியபடி இளநீர் பருகினர். 

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கி கூறிய பின்னர், ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இரு தலைவர்களும் உரையாடியபடி இளநீர் பருகினர்.

முன்னதாக பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் சென்றனர். வேட்டி சட்டையுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்றார். அதன் பின்னர்  மாமல்லபுரம் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். 

இதனையடுத்து, இருதலைவர்களும் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த சிற்பக்கலைகளின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

இதனையடுத்து, அங்குள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து இளநீர் பருகி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

click me!