
குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் திங்கள் கிழமை டிச.18ம் தேதி வெளியாகிறது. அன்றே அனைத்து முடிவுகளும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு அடுத்த நாள் மோடி குமரி மாவட்டத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் பயணம் மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரியில் இந்த மாதத் துவக்கத்தில் வீசிய ஓக்கி புயல் பாதிப்புகளைக் கண்டறிய வருகிறார் பிரதமர் மோடி. வரும் டிச.`19 ம் தெதி அவர் வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில், அவரின் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமரின் ஆய்வு திட்டம்:
தில்லியில் இருந்து டிச.18ஆம் தேதி இரவு 9.30 மணிக்குப் புறப்படும் பிரதமர் நள்ளிரவு 12.15க்கு கொச்சி வருகிறார்.
கொச்சியில் இருந்து டிச 19ஆம் தேதி காலை 7.30 மணிக்கு லட்சத் தீவுகளின் அகாத்திக்கு செல்கிறார்.
டிச.19 ஆம் தேதி காலை 10 மணிக்கு லட்சத்தீவுகளின் கவரத்தியில் ஆய்வு மேற்கொள்கிறார்
பின்னர், டிச.19 ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார்
டிச.19ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரியில் ஆய்வுக்கு பிறகு மாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை 5 மணிக்கே அங்கிருந்து தில்லிக்குத் திரும்புகிறார்.