குஜராத்... மிஷின் ஓட்டும் சீட்டில் பதிவானதும் சரிபார்த்து... 6 பூத்களில் நாளை மீண்டும் வாக்குப் பதிவு! 

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 07:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
குஜராத்... மிஷின் ஓட்டும் சீட்டில் பதிவானதும் சரிபார்த்து... 6 பூத்களில் நாளை மீண்டும் வாக்குப் பதிவு! 

சுருக்கம்

Re polling on Sunday in 6 booths of Gujarat 2nd phase

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல் நடந்த பகுதிகளில் 6 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிச.17 ஞாயிற்றுக்கிழமை நாளை காலை இந்தத் தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற  வட்காம், விரம்காம், தஷ்க்ரோய், சவிலி பகுதியில் நாளை வாக்குப் பதிவு நடக்கும். இதற்கான மறு தேர்தல் குறித்த உத்தரவு வெள்ளிக்கிழமை நேற்று பிறப்பிக்கப் பட்டது.

மேலும் பத்து தொகுதிகளில், வாக்கு எந்திரத்தின் யாருக்கு வாக்களித்தோம் என்று அறிவதற்காக அளிக்கப்படும் சீட்டைப் பொருத்தி, அதன் மூலம் அதன் ரிசல்டைப் பெறுவதற்காக சீட்டைக் கிழித்து வாக்காளர்களிடம் கொடுக்கும் விதமான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  

விசாக்நகர், பேஹராஜி, மொடசா, வேஜல்பூர், வாட்வா,ஜமல்பூர் - காதியா, சாவ்லி, சன்கேதா பகுதிகளில், யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை சரி பார்க்கும் இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் மூலம் எண்ணப்படும் என அறிவித்துள்ளது. 

குஜராத்தில் இரு கட்டங்களிலும் பதிவான ஓட்டுகள் திங்கள் கிழமை  அன்று எண்ணப்படுகிறது. அன்றே தேர்தல் முடிவுகள்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!