நாளை வாரணாசிக்கு செல்லுகிறார் பிரதமர் மோடி!

Published : Feb 15, 2020, 08:41 AM IST
நாளை வாரணாசிக்கு செல்லுகிறார் பிரதமர் மோடி!

சுருக்கம்

பிரதமர் மோடி,தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு  நாளை செல்கிறார். இந்தப்பயணத்தின் போது 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

T.Balamurukan 

பிரதமர் மோடி,தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு  நாளை செல்கிறார். இந்தப்பயணத்தின் போது 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதிக்கு நாளை செல்கிறார். இந்த பயணத்தின் போது 'பனாரஸ் ஹிந்து' பல்கலைக்கழகத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். அதேபோல், பண்டிட் தீனதயாள் 'உபாத்யாய்' நினைவிடம் மற்றும் அவரது சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.  தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, வாரணாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!