மாகராஷ்ட்ரா முதல்வருக்கு எதிராக குட்டையை குழப்பும் கூட்டணிகள்.!! ஆட்சியை நகர்த்துவதில் சிக்கல்!!

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2020, 8:25 AM IST
Highlights

முதலமைச்சர், உத்தவ் தாக்கரே "மகாவிகாஸ் அகாடி" கூட்டணியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் உள்ள 3 கட்சி தலைவர்களையும் 'வர்ஷா' பங்களாவில் சந்தித்து பேசினார். அப்போது அவர், 'கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம்' 


மகாராஷ்ட்ராவில் முதல்வருக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் ஆட்சிக்கான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில், கொள்கை ரீதியில் முரண்பாடான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து "மகாவிகாஸ் அகாடி" கூட்டணியை உருவாக்கி ஆட்சி நடத்தி வருகின்றனர்.இருப்பினும், ஆட்சி அமைந்த நாள் முதல், 3 கட்சி தலைவர்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வழக்கமாகி விட்டது. 

 சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பத்திரிகை ஒன்றில் வீர சாவர்க்கர் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்துத்துவா கொள்கையை கொண்ட சிவசேனா வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கட்டுரை கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது முதலமைச்சர், உத்தவ் தாக்கரேவுக்கு மனவர்த்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

 முதலமைச்சர், உத்தவ் தாக்கரே "மகாவிகாஸ் அகாடி" கூட்டணியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் உள்ள 3 கட்சி தலைவர்களையும் 'வர்ஷா' பங்களாவில் சந்தித்து பேசினார். அப்போது அவர், 'கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம்' என வலியுறுத்தினார் என்றே தெரிகிறது.


 

click me!