ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி சூசகம்..!

Published : Apr 08, 2020, 04:23 PM IST
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி சூசகம்..!

சுருக்கம்

பிரதமர் மோடி கூறுகையில்;- ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு  செயல்படுகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார். பிரதமர் மோடி கூறுவதை பார்த்தால் ஊரடங்கு நீட்டிப்பு என சூசமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 11ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஊரடங்கை நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிது. 

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இதனிடையே, ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற ஐயம் அனைவரும் மத்தியிலும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லூநர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில்;- ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு  செயல்படுகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார். பிரதமர் மோடி கூறுவதை பார்த்தால் ஊரடங்கு நீட்டிப்பு என சூசமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான  மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாக வாய்ப்புள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!