ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்... முதல்வருடன் தனியாக ஆலோசித்த பிரதமர் மோடி..!

Published : Feb 14, 2021, 03:45 PM IST
ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்... முதல்வருடன் தனியாக ஆலோசித்த பிரதமர் மோடி..!

சுருக்கம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழா நடந்து முடிந்த பின்னர் தனியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழா நடந்து முடிந்த பின்னர் தனியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அதிமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் இன்னும் நடைபெறவில்லை. கடந்த முறை பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தபோதுதான் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது. இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரு விளையாட்டரங்கில் இருந்து ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். 

இதனையடுத்து, விழா நடந்து முடிந்த பின்னர் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார். பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறையில் பிரதமரும், முதல்வரும் சந்தித்து பேசினர். 10 முதல் 15 நிமிடங்கள் வரை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார். இதில், அதிமுக - பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் பிரதமர் இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

என் உத்தரவை யாரும் மதிக்கலை... பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்
அதிமுக + காங்கிரஸ் + தவெக... அதிர வைக்கும் இபிஎஸின் அண்டர்டீலிங்..? திணறும் திமுக - பதறும் பாஜ..!