சந்திராயன் பின்னடைவு...! அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் கவலைப்படாதீர்கள்...!! நள்ளிரவில், மாணவர்களை உற்சாகமூட்டிய மோடி...!!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 12:50 PM IST
Highlights

நான் நாட்டின் குடியரசு தலைவர் ஆக வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார், அதற்கு சற்றும் தயங்காமல், ”ஏன் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என்கிறீர்கள் நாட்டின் பிரதமராக ஆகக் கூடாதா”

இஸ்ரோ கட்டுபாட்டு மையத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடியிடம், நான் குடியரசு தலைவர் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்ட மாணவனிடம் ஏன் நீங்கள் பிரதமராக ஆகலாமே என்று மோடி ஆலோசனை கூறியது சோகத்திலிருந்த மாணவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.

சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரில் பார்வையிட நாட்டின் பிரதமர் மோடி பெங்களூருவில்  உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார். சரியான பாதையில் பயணித்து வந்து விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க  சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த போது அதன்  சிக்கனல் துண்டிக்கப்பட்டதால் சந்திராயன் திட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதுவரை உற்சாகத்துடன் விக்ரம் லேண்டரை உற்று கவனித்து வந்த விஞ்ஞானிகள் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் கலக்கத்திலும் சோகத்திலும் ஆழ்ந்தனர் . இத்தனை ஆண்டுகாலம்  கடினமாக உழைத்துவந்த  திட்டத்தில் இப்படி சருக்கல் ஏற்பட்டு விட்டதே என சில விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.  

அதே நேரத்தில் சந்திராயன் விண்கலம்  நிலவில் இறங்குவதை பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுமார் 60 மாணவர்கள்  இஸ்ரோ மையத்திற்கு வந்திருந்தனர்.  மாணவர்களும் விக்ரம் லேண்டார் நிலவில் தரையிறங்குவதை ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். திடீரென்று சிக்னல் துண்டிக்கப் பட்டதால் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மாணவர்களும் சோகமாயினர். இதை கண்ட பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் சொன்ன கையோடு இந்தியாவின் எதிராகலம் மாணவர்கள் கையில்தான் உள்ளது என்பதை  உணர்ந்தவராய், சோகத்திலிருந்த மாணவர்களை உற்சாகமாக பேசி தேற்றினார். அப்போது மாணவர்ளுக்கு விகர்ம் லேண்டர் நிலவில் இறங்கியது அந்த அளவில் நாம் வெற்றிபெற்றுள்ளோம், ஆனால் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது அவ்வளவுதான் ஆனால் இதற்காக வருத்தப்பட தேவையில்லை. நாம் அனைவரும் நமது விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருப்போம், வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வருவது வழக்கம்தான் அனால் அனைத்தையும் எதிர்கொண்டு நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று அவர் மணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். 

அப்போது மாணவர்களும் சோகம் மறந்து பிரதமருடன் உரையாடினர். பிரதமரிடம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பின்  பிரதமர் அவைகளுக்கு பொறுப்பாகவும் பொறுமையாகவும் பதில் அளித்தார், அப்போது அங்கிருந்து மாணவர் ஒருவர்  நான் நாட்டின் குடியரசு தலைவர் ஆக வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார், அதற்கு சற்றும் தயங்காமல், ”ஏன் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என்கிறீர்கள் நாட்டின் பிரதமராக ஆகக் கூடாதா” என்று ஆலோசனை கூறினார் பிரதமரின் இந்த பதிலால் அங்கிருந்தவர்கள் கவலை மறந்து புன்னகை உதிர்த்தனர். சோகத்தில் சூழ்ந்த நிலையில் நம்பிக்கையூட்டும்  பிரதமராக நாட்டின்  தலைவராக மோடி அங்கு செயல்பட்டது மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

click me!