உதயநிதி ஸ்டாலினை வரவழைத்து அதிர்ச்சி கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள்... திமுகவில் திடீர் பரபரப்பு..!

Published : Sep 07, 2019, 12:26 PM IST
உதயநிதி ஸ்டாலினை வரவழைத்து அதிர்ச்சி கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள்... திமுகவில் திடீர் பரபரப்பு..!

சுருக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டியிருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டியிருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திமுகவில் தென்மாவட்டங்களில் அதிகார மையமாக திகழ்ந்த மு.க.அழகிரி தனது தந்தை கருணாநிதி காலத்திலேயே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே கட்சியில் மீணடும் இணைய பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலினிடம் கெஞ்சியும் மிஞ்சியும் பார்த்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. 

காலம் கனியட்டும் என காத்திருந்து வருகிறார் மு.க.அழகிரி. மதுரையில் தனது குடும்பத்துடன் ஓர ஒதுங்கியிருக்கும் அவரை வழியச் சென்று வம்பிழுத்து வருகின்றனர் கழக உடன்பிறப்புகள். மதுரை வடக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக ஆனையூர் பகுதி 48-வது வார்டு சின்ன புளியங்குளம் கம்மாய் தூர்வாரி கரை அகலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவரை வரவேற்று மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ”உங்கள் பெரியப்பா மு.க.அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருக வருக” என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப்போஸ்டர் மு.க.அழகிரியை வம்பிழுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா? அல்லது மதுரை இன்னும் மு.க.அழகிரியின் கோட்டை தான் என்பதை உதயநிதி ஸ்டாலினுக்கு உணர்த்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா? என்கிற குழப்பம் திமுகவினருக்கு எழுந்துள்ளது. 

அழகிரியை கவுரவப்படுத்தும் வகையில் தான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக அழகிரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். காரணம், போஸ்டரில் உதயநிதியின் படத்தை சிறியதாகவும், மு.க.அழகிரியின் படத்தை பெரியதாகவும் போட்டு அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!