அ.தி.மு.க.வுக்கு மோடி கொடுத்த பணம் எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா..? கவலையே படாமல் போட்டுடைத்த பி.ஜே.பி. தலைவர்..!

By Vishnu PriyaFirst Published Feb 22, 2019, 3:41 PM IST
Highlights

இந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்துக்கு மோடி தந்திருக்கும் நிதியின் மொத்த மதிப்பு ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் கோடி. இந்த தொகையானது இதுவரையில் தமிழகம் எந்த ஒரு மத்திய அரசிடமிருந்தும் பெற்ற நிதியில் நூற்று இருபது சதவீதம் அதிகம்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் எதையுமே தமிழகத்துக்கு செய்யாமல் இப்போது திட்ட அறிவிப்புகளாக அள்ளியள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நடிப்பை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். எத்தனை தொகுதிகளில் நின்றாலும் ஒன்றில் கூட பி.ஜே.பி. இங்கே ஜெயிக்காது!...என்று தாமரையை தலைகீழாக பிடித்து நார்நாராய் கிழித்தார் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை. 

இதையே கப்பென்று பிடித்துக் கொண்டு, அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியை விரும்பாத ஆளுங்கட்சியின் பல நிர்வாகிகள் விளாசி எடுத்து வருகிறார்கள். பி.ஜே.பி.க்கு பெரும் சங்கடத்தை இந்த விவகாரம் கொடுத்துவ் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதாவது பி.ஜே.பி. இளைஞரணியின் அகில இந்திய தலைவராக இருக்கும் முருகானந்தம் இப்போது ஒரு பேட்டியை தட்டிவிட்டுள்ளார் அதில்...”தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எதையுமே செய்யவில்லை என்று, நிதியே கொடுக்கவில்லை என்று அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரே மோசமான வதந்தியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் உண்மையோ நேர் எதிர். அதாவது, இந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்துக்கு மோடி தந்திருக்கும் நிதியின் மொத்த மதிப்பு ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் கோடி. இந்த தொகையானது இதுவரையில் தமிழகம் எந்த ஒரு மத்திய அரசிடமிருந்தும் பெற்ற நிதியில் நூற்று இருபது சதவீதம் அதிகம். உண்மை இப்படியிருக்க, நாங்கள் தமிழகத்துகு நிதி தரவில்லை என்று சொன்னதை மிக மிக வன்மையாக மறுக்கிறேன்.” என்று அதிரடி காட்டியுள்ளார்.

 

முருகானந்தத்தின் இந்த ஸ்டேட்மெண்ட் இப்போது ஆளுங்கட்சிக்கு பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. காரணம் ‘இவ்வளவு பணத்தை மத்தியரசு தந்துள்ளதாக அதன் அகில இந்திய நிர்வாகியே கூறுகிறார். அப்படியானால் அந்த நிதி எப்படி பயன்பட்டிருக்கிறது, என்னென்ன கணக்கு வழக்குகள், அதன் தணிக்கை லிஸ்ட் எங்கே? மீதியிருக்கும் தொகை எவ்வளவு?’ என்று மளமளவென கேள்விகளை துவக்கி, ஆளுங்கட்சியை அடிச்சு தூக்க துவங்கிவிட்டனர். 

மண்டை காய்ந்து கிடக்கின்றனர் ஆளுங்கட்சியினர். இது இப்படியிருக்க, ‘ஏங்க பாஸ் இவ்வளவு பணம் நெசமாலுமே நீங்க தமிழகத்துக்கு கொடுத்திருந்தால்,  அதை மக்களிடம்  சொல்லிக்காட்டி 39 தொகுதியிலும் தனிச்சே நிக்கலாமே? ஏன் இவங்ககிட்ட வெறும் 5 சீட்டுக்கு அல்லாடுறீங்க?’ என்று சிலர் கேள்வி கொக்கியைப் போட்டுள்ளனர்.

click me!