’அம்மா’ காலில் விழுந்த அப்பா... ’டாடி’ காலில் விழுந்த மகன்... தேனியில் தொடரும் விஸ்வாசம்..!

Published : Apr 13, 2019, 01:37 PM ISTUpdated : Apr 13, 2019, 01:44 PM IST
’அம்மா’ காலில் விழுந்த அப்பா... ’டாடி’ காலில் விழுந்த மகன்... தேனியில் தொடரும் விஸ்வாசம்..!

சுருக்கம்

பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த தேனி மக்களவை தொகுதி வேட்பாளரும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இதனையடுத்து மற்ற வேட்பாளர்களும் அடுத்தடுத்து மோடியின் காலில் விழுந்தனர்.

பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த தேனி மக்களவை தொகுதி வேட்பாளரும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இதனையடுத்து மற்ற வேட்பாளர்களும் அடுத்தடுத்து மோடியின் காலில் விழுந்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்தார். 

தேனியில் இன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா எனக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்துக்காக வந்த பிரதமர் மோடியை வரவேற்று துணை முதல்வரும் முதல்வரும் பேசினர். 

பின்னர் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மோடியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அதனை தடுக்கும் விதமாக அவரைத் தூக்கி நிறுத்திய மோடி, சிரித்தவாறே ஏதோ சொன்னார்.

இதனையடுத்து மற்ற வேட்பாளர்களும் அடுத்தடுத்து மோடியின் காலில் விழுந்தனர். ஜெயலலிதா காலில் விழுந்த காலம் போய் இப்போது அதிமுக அமைச்சர்களால் டாடி என்று கூறப்படும் மோடியின் காலில் விழுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!