ரொம்ப துள்ளாதீங்க... உங்களையா கூப்பிட்டாரு மோடி..? ஸ்டாலினைச் சீண்டும் தமிழிசை..!

By vinoth kumarFirst Published Jan 11, 2019, 6:10 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து டெல்லியில் தமிழிசை அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு நல்லதுதான் செய்கிறது. தேசிய எண்ணத்தோடு யார் வேண்டுமானாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர இந்தந்த கட்சிகள் தான் கூட்டணி வரவேண்டும் என கூறவில்லை என்றும் தெளிபடுத்தினார்.

வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுக.வுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக் கொண்டார் என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் வரிந்துகட்டி பேசுவதால்தான் ஏதோ சநதேகம் வருகிறது. திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!