ஏற்கனவே சொன்ன தேதியில்   பிளஸ் – 2 ரிசல்ட் கண்டிப்பா வெளியாகும்….. என்றைக்கு  தெரியுமா ?  

Asianet News Tamil  
Published : May 10, 2018, 11:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஏற்கனவே சொன்ன தேதியில்   பிளஸ் – 2 ரிசல்ட் கண்டிப்பா வெளியாகும்….. என்றைக்கு  தெரியுமா ?  

சுருக்கம்

Plus two result will be published on May 16th

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.

இதனால் மாணவர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதியும் வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தார்.

அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வருகிற 16-ந் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுன்ன அறிவிப்பில், கடந்த 1998-ம் ஆண்டு வரை தேர்வு முடிவு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர்.

2003-ம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே இந்த ஆண்டு  வரும் 16  ஆம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அடியாட்களோடு ரௌடியிசம் செய்த திமுக செந்தில் வேல்..! குண்டர்களோடு பாஜகவினரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ..!
லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தையா நீக்குறீங்க..? செக் வைத்த எல்காட்..! இப்படியொரு சிக்கலா..?