ஹூ இஸ் தட் பிரேமலதா...? கோபத்தில் கொதித்த பியூஸ் கோயல்... சர்வமும் ஆடிப்போன சுதீஷ்... கையை பிசையும் விஜயகாந்த்..!

By Vishnu PriyaFirst Published Mar 7, 2019, 12:01 PM IST
Highlights

உச்சபட்ச உஷ்ணமானவர் அடுத்து தன் லைனுக்கு சுதீஷ் வந்தபோது “நான் மத்தியரசின் கேபினெட் அமைச்சர். இவ்வளவு நட்பா உங்ககிட்டே பேசிறேன்னா அதுக்கு ஒரே காரணம் விஜயகாந்தின் மனசுக்குதான். ஆனா ஹூ இஸ் தட் பிரேமலதா? (யார் அவங்க பிரேமலதா?), அவங்க ஏன் நிலைமையை இவ்வளவு குழப்பமாக்குறாங்க? பிரதமரையே காக்க வைக்கிறது

பி.ஜே.பி.யின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளாகிவிட்டது தே.மு.தி.க! என்பதுதான் அ.தி.மு.க. கூட்டணிக்குள் சுழன்றடிக்கும் பெரிய பரபரப்பு இப்போது. அதிலும் தமிழக பி.ஜே.பி.யின் தேர்தல் செயல்பாடுகளுக்கு தலைமையேற்றுள்ள மத்தியமைச்சர் பியூஸ் கோயலின் முழு கோபத்துக்கும் பிரேமலதாவும், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனும் ஆளாகியிருப்பது தே.மு.தி.க. வட்டாரத்தையே மிரள வைத்துள்ளது. 

என்ன பிரச்னை?.... தமிழத்தில் தாங்கள் இணைந்துள்ள அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இருக்க வேண்டும் என்பது பி.ஜே.பி.யின் விருப்பம். அதனால்தான் எந்த ஈகோவும் பார்க்காமல், விஜயகாந்தை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிள்ளையார் சுழி போட்டார் பியூஸ் கோயல். அவரும், முரளிதர் ராவ் சென்றபோது விஜயகாந்தின் உடல்நிலை இருந்த நிலை, அவரது நினைவாற்றல் திறன், பரபரப்புக்கு ஈடுகொடுக்க இயலாத பேச்சு மற்றும் செயல் திறன் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர் கோயலும், ராவும்.

 

ஆனாலும் அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்து, இணக்கமுகம் காட்டியபடிதான் இருந்தனர். பா.ம.க.வை விட அதிக தொகுதி தங்களுக்கு வேண்டும்! என்று துவக்கத்தில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்த பிரேமலதா, ஒரு கட்டத்தில் பா.ம.க.வுக்கு நிகராக ஏழு மக்களவை சீட்டுக்கள் மற்றும் இரண்டு ராஜ்யசபா சீட்கள் கேட்டிருக்கிறார். இதை அ.தி.மு.க. தரப்பு ஏற்க தயாரில்லை. இதில் துவங்கிய இழுபறி நேற்று மதியம் வரையில் நீடித்தது. மோடியின் நேற்றைய சென்னை பிரசார மேடையில் விஜயகாந்தை உட்கார வைத்திட இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் பெரிதாய் ஆசைப்பட்டனர். 

இவர்களை விட கோயல் ரொம்ப்வும் மெனெக்கெட்டார். ஆனாலும் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை தே.மு.தி.க. நிர்வாகம். பிரதமர் வருவதற்கு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தொடர்ந்து முயன்றார் கோயல். ஆனால் அவர் தரப்பு போன் அழைப்பை கூட விஜயகாந்த் வீட்டு தரப்பு இரண்டு முறை ‘மிஸ்டு கால்’ ஆக்கியது. இதில் பெரும் டென்ஷனுக்கு போய்விட்டார் கோயல். ’என்னதான் பிரச்னை அந்த விஜயகாந்த் கட்சிக்கு?’ என்று கடுப்பில் கேட்டிருக்கிறார். அவர் இவ்வளவு சூடாக காரணம், தான் நிற்கபோகும் மேடையானது வலுவான கூட்டணிகளுடன் கெத்தாக இருக்கவேண்டும் என்று மோடி எதிர்பார்ப்பதனால்தான்! இதை நிறைவேற்றமுடியாமல், பிரதமரின் கோபத்துக்கும் வருத்தத்துக்கும் தான் காரணமாகிவிடுவோமே எனும் பதற்றம்தான் கோயலுக்கு.  

கோயலின் கோபத்தைப் பார்த்துவிடு தமிழக பி.ஜே.பி.யின் தலைமை நிர்வாகிகள் சிலர் சுதீஷுக்கு போன் போட்டு விஷயத்தை கேட்டிருக்கின்றனர். அப்போது, இப்போது தர தயாராக இருக்கும் சீட்களை வாங்கிக் கொள்ள விஜயகாந்த் ரெடியாக இருக்கிறார் ஆனால் பிரேமலதாவுக்குதான் திருப்தி இல்லை! எனும் ரீதியில் சுதீஷ் பேசியிருக்கிறார். 

இது அப்படியே கோயலின் காதுகளுக்குப் போய்விட, உச்சபட்ச உஷ்ணமானவர் அடுத்து தன் லைனுக்கு சுதீஷ் வந்தபோது “நான் மத்தியரசின் கேபினெட் அமைச்சர். இவ்வளவு நட்பா உங்ககிட்டே பேசிறேன்னா அதுக்கு ஒரே காரணம் விஜயகாந்தின் மனசுக்குதான். ஆனா ஹூ இஸ் தட் பிரேமலதா? (யார் அவங்க பிரேமலதா?), அவங்க ஏன் நிலைமையை இவ்வளவு குழப்பமாக்குறாங்க? பிரதமரையே காக்க வைக்கிறது, குழப்புறதும் நல்லாவா இருக்குது, இந்த மாநிலத்தோட முதல்வர்கள் இவ்வளவு இறங்கி வந்தும் ஏன் உங்க பார்ட்டி இப்படி பண்றீங்க? எல்லாத்தையும் தாண்டி நீங்க என்னதான் எதிர்பார்க்கிறீங்க?” என்று படபடவென பொரிந்து தள்ளிவிட சுதீஷால் ஒரு வார்த்தை பதில் பேசமுடியவில்லையாம். அவருக்கு வியர்த்துக் கொட்டியதை பக்கத்திலிருந்து பார்த்த பார்த்தசாரதிக்கு கண்களில் பஞ்சு பறந்துடுச்சாம். கோயலின் கோபத்துக்கு பிறகே மேடையிலிருந்த விஜயகாந்தின் படமானது அகற்றப்பட்டிருக்கிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!?

click me!