Army Helicopter crash: பாதுகாப்பு படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.. ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2021, 6:09 PM IST
Highlights

மோசமான வானிலையே நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அந்த விபத்தில் மொத்தம்  13 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.  

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த தேசத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 14 பேர் பயணித்த தில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிபின் ராவத் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி உள்ளது. அதில் நடக்க இருந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் நான்கு பைலட்கள் உட்பட மொத்தம் 14 பேர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ராணுவ விமானப் படை தளத்தில் இருந்து 11 :47 மணி அளவில் ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் நோக்கி புறப்பட்டனர். அங்கிருந்து ராணுவ மையத்தை அடைய 10 நிமிடம் உள்ள நிலையில் எலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி நஞ்சப்பா சத்திரம் என்னும் பள்ளத்தாக்கிற்கு மேலே பறந்த போது பிற்பகல் 12:40 மணி அளவில் கடும் மேக மூட்டம் நிலவியது, இன்று காலை முதலே அந்தப் பகுதியில் பனிமூட்டமான சூழல் இருந்ததாலும்  அதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மூன்று முறை மோதி மலையின் முகட்டில் விழுந்து பற்றி எரிந்தது. 

அதில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் தீயில் கருகினர். சுமார் ஒன்றரை மணி நேரம் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதன்பிறகு அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதையடுத்து இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்த இந்திய பாதுகாப்புப் படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை என்ன என்பது இதுவரை தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் பிபின் ராவத் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுவும்  அதிகாரபூர்வமான தெரிவிக்கப்படாமல் இருந்தது . இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத்தின் மகளை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் பிபின் ராவத் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த தேசத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் வருகை தர உள்ளார். MI-17 மோசமான வானிலை போன்ற எந்த சூழ்நிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய  ஹெலிகாப்டர்கள் தான் ஆனாலும் அது விபத்தை சந்தித்திருப்பது இந்திய பாதுகாப்பு துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மரத்தில் மோதி தடுமாறி பின்னர் மலையின் முகட்டில் விழுந்து எரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விமான பாகங்கள் எரிவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்தை சந்தித்த விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தீயில் எரிந்தது. அதன் பின்னரே மீட்பு பணிகளில் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. 
 

click me!