அமித் ஷா அலுவலகத்தில் இருந்து அடித்த போன்... இலங்கையில் இருந்து வந்து பாலிவுட் நடிகையை ஏமாற்றிய தில்லாலங்கடி.!

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2021, 8:46 PM IST
Highlights

அமெரிக்காவில் உள்ள தனது சகோதரி ஜெரால்டின் பெர்னாண்டஸுக்கு அமெரிக்க டாலரில் 150,000 அனுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரர் வாரன் பெர்னாண்டஸின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை மாற்றியுள்ளார்.

அமலாக்கத்துறை ஆவணங்களின்படி, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலக தொலைபேசி எண்ணை நகலெடுத்து, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அவருடன் நட்பு கொள்ளுமாறு தெரிவித்து ஏமாற்றியுள்ளார்.

2020 டிசம்பரில் இருந்து தான் இலங்கை நடிகருடன் நட்பாக இருப்பதாகக்கூறியதுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து அரசாங்க அதிகாரியாக காட்டி ஆள்மாறாட்டம் செய்து ஜாக்குலினின் ஒப்பனைக் கலைஞரான ஷான் முத்தத்திலை தொடர்பு கொண்டுள்ளார்.  அந்த உரையாடலில், தன்னை உள்துறை அமைச்சக அதிகாரியாக காட்டிக் கொண்ட சுகேஷ், "தான், ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பேச வேண்டும். தான் ஒரு முக்கியமான நபர். அவருடன் பேச விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதனை உண்மை என நம்பிய ஷான், "அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து" போன் வந்ததாகக்கூறி ஜாக்குலினிடம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 2020 ல், அவர் சுகேஷ் சந்திரசேகருக்கு போன் செய்துள்ளார். அந்த அழைப்பில், ஜாக்குலினுக்குடன் பேசிய சுகேஷ், தான் ஜெயலலிதாவின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் சன் டிவியின் உரிமையாளர் என்றும் கூறியுள்ளார். 

அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ், ஜாக்குலின் பெர்னாண்டஸை தனது மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் அழைத்து, பிப்ரவரி, 2021 ல் தன்னை ‘சேகர் ரத்ன வேலா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுகேஷ் சந்திரசேகர், பிப்ரவரி, 2021 முதல் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். ஆகஸ்ட் 07, 2021 அன்று அவர் கைது செய்யப்படும் வரை, அவர் தனது தீவிர ரசிகன் என்றும், அவர் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் ஜாக்குலினை நடிக்க வைக்க சன் டிவியில் பல திட்டங்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுகேஷின் கூட்டாளியும், கைது செய்யப்பட்ட குற்றவாளியுமான பிங்கி இரானியுடன் ஜாக்குனிடம் பேச வைத்துள்ளார். பிங்கி மூலம் ஜாக்குலினுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.  விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜாக்குலின் பெர்னாண்டஸை அந்த சுகேஷுடன் நட்பு கொள்ளச் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜாக்குலினை கவர சுகேஷ் சார்பில் பிங்கி விலை உயர்ந்த பரிசுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விலையுயர்ந்த பரிசுகளை அனுப்பியுள்ளார். ஜாக்குலின் இந்தியாவிற்குள் செல்ல தனி விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார். இருவரும் சேர்ந்து சொகுசு ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

"இந்த பணம் அனைத்தும் சுகேஷால் திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட குற்றத்தின் வருமானத்தில் செய்யப்பட்டவை" என்று  அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரஜையான சுகேஷ் 2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்.

சுகேஷ் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரி ஜெரால்டின் பெர்னாண்டஸுக்கு அமெரிக்க டாலரில் 150,000 அனுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரர் வாரன் பெர்னாண்டஸின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தை மாற்றியுள்ளார்.

சுகேஷ், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு "எஸ்புவேலா" என்ற குதிரையையும் வாங்கிக் கொடுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். 10 கோடிக்கு மேல் மதிப்புள்ள பரிசுகளை சுகேஷ் ஜாக்குலினுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. சுகேஷ் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தபோது இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.

click me!