இரட்டிப்பு மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்... அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

By vinoth kumarFirst Published Feb 22, 2020, 1:08 PM IST
Highlights

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ, கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய வைத்த நிலையில், தற்போது பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை முதல்வர் எடப்பாடி ரத்து செய்துள்ளது விவசாயிகளின் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு 2017-ம் ஆண்டு ஜூலை 19-ல் பிறப்பித்தது. அதன்படி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்தது. இதற்கு டெல்டா மாவட்டங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

ஏற்கனவே, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ, கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய வைத்த நிலையில், தற்போது பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை முதல்வர் எடப்பாடி ரத்து செய்துள்ளது விவசாயிகளின் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!