100 ரூபாயைத் தொட்ட பெட்ரோல் விலை !! போராட்டத்தில் குதித்த பொது மக்கள் !! பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி அட்டகாசம்…

By Selvanayagam PFirst Published Oct 2, 2018, 7:41 AM IST
Highlights

ஒடிசா மாநிலம் பூரியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 சிலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள், ஒரு பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெணின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன. தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. இதையடுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை தொடங்கப்பட்டது.

தற்போது ஒவ்வொரு நாளும் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் விலை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 89 ரூபாய்ககு விற்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களும் இதனால் தங்கள் வாகங்களை ஓரங்கட்டி வைத்துள்ளனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையான உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் பூரியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்கபட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.

அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரும் எவ்வளவோ முயற்சி செய்தும் பொது மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில முதல்முறையாக பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பொது மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!