இது வரை இல்லாத விலை உயர்வு…. உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை …..

 
Published : Mar 26, 2018, 08:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
இது வரை இல்லாத விலை உயர்வு…. உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை …..

சுருக்கம்

petrol and diesel price hike

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.49, டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது வரை இல்லா அளவுக்கு இன்று பெட்ரால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.49 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.67.14 காசுகளாகவும் உள்ளன.

தொடர்ந்து ஏற்றத்தை  சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்