அரசியல் கட்சிகள் நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி... திமுக தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Apr 16, 2020, 11:58 AM IST
Highlights
அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், தனது உத்தரவில் திருத்தங்கள்  செய்து அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் நேரடியாக உணவு, மருந்து போன்றவற்றை நேரடியாக வழங்க தடை என்பதை கட்டுப்பாடுகள் என்று மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  உணவு, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சிகள் நேரடியாக வழங்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி , முகக்கவசம் உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், தனது உத்தரவில் திருத்தங்கள்  செய்து அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் நேரடியாக உணவு, மருந்து போன்றவற்றை நேரடியாக வழங்க தடை என்பதை கட்டுப்பாடுகள் என்று மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து திமுக,  மதிமுக. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்தனர். அந்த மனுக்களில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகவும், அப்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என மனுவில் தெரிவித்திருந்தனர்.


இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. திமுக தரப்பில் மூத்த வழக்கிறஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வில்சன் ஆஜராகி வாதிட்டார். 130 கோடி மக்களை அரசால்  மட்டுமே முழுமையாக அணுக முடியாது.  உதவி வேண்டுபவர்களுக்கு தேவையானவற்றை அருகில் இருக்கும் சக குடிமகன்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரே அறிவுறுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசின் அறிவிப்பு உள்ளது கூறினார். 

அரசு தரப்பில் இக்காட்டான கால கட்டங்கள் போலவோ அல்லது இயற்கை பேரிடர் காலம் போன்றோ தற்போதைய நிலை இல்லை. மிகவும் ஆபத்தான கொடிய பேரிடராக கொரோனா தொற்று உள்ளதால் அவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க 300க்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள். அவ்வாறு கூடும்போது நோய் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதை அனுமதிக்க கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர். 


அரசுக்கு எதிராகதிமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை; தகவல் தெரிவித்தாலே போதும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருள்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும். நிவாரணப் பொருள்களை வாகன ஓட்டுநர் உள்பட 4 பேர் சென்று  வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நிவாரணப் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
click me!