ஆட்சிக்கு உலை வைக்கத் தயாராகும் செந்தில்பாலாஜி - உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி

Asianet News Tamil  
Published : May 04, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
ஆட்சிக்கு உலை வைக்கத் தயாராகும் செந்தில்பாலாஜி - உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி

சுருக்கம்

permission granted for senthil balaji

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது...

கரூர் மாவட்டம் வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஆட்சிக்குள்ளும் கட்சிக்குள்ளும் அதிகார சக்தியாக வலம்வந்த மலிவு விலை குடிநீர் உள்ளிட்டபல திட்டங்களால் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர். யார் கண்ணு பட்டதோ என்று சொல்லும் அளவுக்கு அமைச்சர் பதவி பறிப்பு, கட்சியில் இருந்து நீக்கம் என பரமபதத்தில் பாம்பு கடித்தது போல சட்டென்று ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். 

அரவக்குறிச்சி  கை கொடுக்க தற்போது அரசியல் என்னும் ஆர்ப்பரிக்கும் கடலில் துடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அழகு பார்க்கப்பட்ட ஜெந்தில்பாலாஜி, ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அரசால் தற்போது வரை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளார்.

இழந்த இந்த குட் இமேஜை சீர்செய்ய குப்பிச்சிபாளையம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை சரியாகவே பயன்படுத்தி வருகிறார் செந்தில்பாலாஜி...

இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் இருக்க செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செந்தில்பாலாஜி அண்மையில் மனுதாக்கல் செய்தார்.

இதற்கிடையே வாட்டாட்சியர் அலுவலகத்திற்கு பதிலாக வாங்கல் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். செந்தில்பாலாஜிக்கு போட்டியாக நெடுஞ்செழியனுக்கும் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?