பெரியார் புகழ் ஓங்குக! தமிழில் ட்வீட் போட்டு கெத்து காட்டிய பினராயி விஜயன் !!

Published : Sep 18, 2019, 08:43 AM IST
பெரியார் புகழ் ஓங்குக! தமிழில் ட்வீட் போட்டு  கெத்து காட்டிய பினராயி விஜயன் !!

சுருக்கம்

பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்… ஓங்குக பெரியார் புகழ் என தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கேரளா மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் தமிழில் டுவீட் செய்து அசத்தியுள்ளார்.

பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் பெரியாரின் பிறந்தநாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்!  பெரியார் புகழ் ஓங்குக!’ என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள வைக்கம் பகுதியில் தந்தை பெரியார்  சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது அம்மாநில மக்களிடையே இன்றும் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் பிரச்னைகளுக்கு பெரியாரை அவ்வப்போது உதாரணம் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Magalir Urimai Thogai: பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!