என்னையும், அன்புமணியையும் திட்டுறவங்க எல்லாம் பொறம்போக்குங்க… ஈனப்பிறவிங்க ! செம காண்டான ராமதாஸ் !!

Published : Sep 18, 2019, 07:32 AM IST
என்னையும், அன்புமணியையும் திட்டுறவங்க எல்லாம் பொறம்போக்குங்க… ஈனப்பிறவிங்க ! செம காண்டான ராமதாஸ் !!

சுருக்கம்

அன்புமணிக்கு நாளும் தமிழகத்தில் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இணையத்தில் தவறாக பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடுபவர்கள்  எல்லாம் பொறம்போக்குகள், ஈனப்பிறவிகள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மிகக் கடுமையாக திட்டியுள்ளார்  

வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரவு உயிரிழந்தார். அதையடுத்து, காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜெ.குருவின் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டியில் அவருக்கு மணிமண்டபமும் அவரை அடக்கம் செய்த இடத்தில் நினைவிடமும் கோனேரிக்குப்பத்தில் தொடங்க உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக்கல்லூரிக்கு காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டு நினைவுச்சிலை அமைக்கப்படும்” என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்திருந்தார்.

இதன் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ஜெ,குருவுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. ராமதாஸ் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், அன்புமணிக்கு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இணையத்தில் என்னைப்பற்றியும், அன்புமணி மற்றியும் தவறாக பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடுபவர்கள்  பொறம்போக்கு, ஈனப்பிறவிகள் என மிகக் கடுமையாக திட்டினார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!