பெரியாருக்கு உண்டு... பிரதமர் மோடிக்கு இல்லை... தீர்க்கமான நிலையில் டி.டி.வி.தினகரன்..!

Published : Sep 17, 2020, 11:21 AM IST
பெரியாருக்கு உண்டு... பிரதமர் மோடிக்கு இல்லை... தீர்க்கமான நிலையில் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

பெரியார் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அறிவாயுதத்தை  ஏந்தி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சமூக நீதிக்கு பங்கம் வராமல் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட இந்நாளில் சபதம் ஏற்போம்

இன்று தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து புகழைப்போற்றி வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வீடியோவுடன், ‘’சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளர், சமூக நீதிக்காக சளைக்காமல் உழைத்த போராளி, பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த பெருந்தகையாளர், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று! 

 

தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அறிவாயுதத்தை  ஏந்தி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சமூக நீதிக்கு பங்கம் வராமல் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட இந்நாளில் சபதம் ஏற்போம்’’எனப் பதிவு செய்துள்ளார்.  அதேவேளை இன்று பிரதமர் மோடி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை சொன்ன டி.டி.வி.தினகரன், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை சொல்லவில்லை.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!