49-வது நினைவு தினம்.. தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கையோடு டுவீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்..!

Published : Dec 24, 2022, 11:25 AM IST
49-வது நினைவு தினம்.. தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கையோடு டுவீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்..!

சுருக்கம்

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளையோட்டி சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்தூவி மரியாதை செலுத்தினார். 

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளையோட்டி சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனை தொடர்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்! என பதிவிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!