ரன்னிங்.. சேஸிங் மொத்தமும் வேஸ்டா.. ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை அசால்டாக தட்டித்தூக்கிய திமுக.!

By vinoth kumar  |  First Published Dec 24, 2022, 9:41 AM IST

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில், 6 வார்டுகளை திமுகவும், 6 வார்டுகளை அதிமுகவும் சம பலத்துடன் இருந்தனர். இந்த தேர்தல் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 


கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளனர். 

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில், 6 வார்டுகளை திமுகவும், 6 வார்டுகளை அதிமுகவும் சம பலத்துடன் இருந்தனர். இந்த தேர்தல் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், தேர்தல் முடிவை நீதிபதிகள் மூலம் அறிவிக்கப்படும்  அறிவுறுத்தப்பட்டது. 

Latest Videos

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு படி சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து  கரூர் ஊராட்சி தேர்தல் முடிவை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தேர்தல் முடிவுகளை வெளியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ்   4 வாக்குகள் பெற்றார். 7 வாக்குகள் பெற்ற திமுகவை சேர்ந்த தேன்மொழி மாவட்ட துணைத்தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

முன்னதாக துணைத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட கரூர் மாவட்ட கவுன்சிலர் திருவிக என்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுடன் திண்டுக்கலில் இருந்து காரில் கரூருக்கு வந்து கொண்டிருந்த போது வேடசந்தூர் பகுதியில் காரில் வந்த திருவிகாவை மர்மநபர்கள் கடத்தி சென்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!