"ஒரு நாள் ஜல்லிக்கட்டுக்கே போராடுனீங்க… இன்னும் 4 வருஷம் எப்படி ஓட்டுறது?" - ஓபிஎஸ் தொகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்…

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"ஒரு நாள் ஜல்லிக்கட்டுக்கே போராடுனீங்க…  இன்னும் 4 வருஷம் எப்படி ஓட்டுறது?" - ஓபிஎஸ் தொகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்…

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சசிகலா இன்றோ அல்லது 9 ஆம் தேதியோ சசிகலா முதலமைச்சராக பதவியேற்ப உள்ளார். அதற்கு வசதியாக முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்றே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி பதவி இழந்தபோது, அவருக்குப் பதிலாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஓபிஎஸ். பணிவுக்கு பெயர்போன ஓபிஎஸ் ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொண்டு நல்ல பெயரெடுத்தார்.

பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ, மீண்டும் பதவி இழந்தபோது, விசுவாசத்தின் மறுபெயரான ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஜெ வின் துறைகளை ஓபிஎஸ் கவனித்துக் கொண்டார். இப்படி அதிமுகவுக்கு நெருக்கடி வந்த போதெல்லாம் உதவியாக இருந்தவர் ஓபிஎஸ். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் ஓபிஎஸ்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெ மரணமடைந்ததையடுத்து, ஓபிஎஸ் 3 ஆவது முறையாக முதலமைச்சரானார். இம்முறை அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நன்றாக இருந்ததாக பொது மக்கள் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் திடீரென பதவி விலகினார். சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அவரே முன்மொழிந்ததையடுத்து, சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடக்கப்பட்டார்.

ஆனால் இம்முறை ஓபிஎஸ் பதவி விலகியதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஓபிஎஸ் ன் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடியை அடுத்த வெம்பக்கோட்டை கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு நாள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடர் போராட்டம் நடத்திய மாணவர்கள், ஓபிஎஸ் க்காக போராட்டக் களத்தில் குதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய தொடர்ந்து தற்போது வரை நடைபெற்று வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?