அரசியல் கட்சிகள் மீது மக்களின் விருப்பு வெறுப்பு எவ்வாறு இருக்கிறது? ஏசியா நெட் நியூஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்

First Published Aug 3, 2018, 4:40 PM IST
Highlights

தமிழக அரசியலில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் மனதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கான ஆதரவு எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

தமிழக அரசியலில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் மனதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கான ஆதரவு எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. 

தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, தினகரன் தலைமையிலான அமமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாஜக, காங்கிரஸ் இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன. இதில் வரப்போகும் தேர்தலில் மக்கள் யார் பக்கம்? என்று நடத்தப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவில், திமுக தான் முன்னணியில் இருக்கிறது. 

இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தமிழக மக்களின் அரசியல் சார்ந்த முடிவுகளில் இருக்கும் மனநிலையை வெளிப்படையாக காட்டுகிறது. புதிதாக களத்தில் குதிக்கும் ரஜினி கமல் போன்ற நட்சத்திரங்கள் மீதும் மக்களின் விருப்பு வெறுப்பு வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு, தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டது. இதில் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து இந்த கருத்துக்கணிப்பில் அரசியல் கட்சிகள் மீது மக்களின் விருப்பு வெறுப்பு எவ்வாறு இருக்கிறது? அதிகமாக வெறுக்கும் கட்சி எது என்ற முன்னிறுத்தி கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களின் காட்டமான பதில் சர்வே ரிசல்ட் வெளிபடுத்தியுள்ளது.

திமுக மீது மக்கள் வைத்திருக்கும் விருப்பு வெறுப்பு குறித்து மக்களின் கருத்து இதோ; எதிர்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் சுத்தமாக பிடிக்காது என 22 சதவீத மக்களும், கடந்த காலங்களில் திமுகவின் சில தவறால் வெறுக்கிறேன் என  25 சதவிகித மக்களும்,  சில விஷயங்களுக்கு பிடிக்கும் என 25 சதவிகித மக்களும், ரொம்ப ரொம்ப பிடிக்கும் என 28 சதவிகித மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை மக்களின் வெறுப்பு அதிகமாகவே உள்ளது என்பதை சர்வே ரிசல்ட் சொல்கிறது. இதில்,    28.5 சதவிகித மக்கள் இந்த கட்சியின் ஆட்சியை வெறுக்கிறார்கள், அதிமுகவின் சில தவறுகளால் 37.5  சதவிகித மக்கள்  இந்த ஆட்சி மீது கோபத்தில் உள்ளார்கள், 25 சதவிகிதம் இந்த ஆட்சி பிடிக்கிறதென கூறியுள்ளார்கள் , 9 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் களத்திற்கு புதியதாக வரும் ரஜினியை  27 சதவிகித மக்கள் அறவே வெறுக்கின்றனர். 36 சதவிகித மக்கள் சில விஷயங்களுக்காக வெறுக்கின்றனர்.  25 சதவிகித மக்கள் சில செயல்பாடுகள் பிடித்தாக கருத்து தெரிவித்துள்ளார்கள், ரொம்ப பிடிக்கும் 12 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை அறவே வெறுப்பதாக 22 சதவிகித மக்களும், காங்கிரஸின் சில விஷயங்கள் பிடிக்காது என 39  சதவீத மக்களும், 28 சதவிகித மக்கள் பிடிக்கும் எனவும், ரொம்ப பிடிக்கும் என 7 சதவிகித மக்களுக்கு காங்கிரசின் செயல் பாடுகள் பிடிக்கும் என கூறுகின்றனர். 

விஜயகாந்த் மீதான அரசியல் செயல்பாடுகள் குறித்து வாக்களித்துள்ள தமிழக மக்களில் 26 சதவிகிதத்தினர் சரியில்லை என வாக்களித்துள்ளனர். சில விஷயங்களுக்காக அவரை பிடிக்கவில்லை அரசியலில் அவரது அணுகுமுறை சரியில்லை  என  39 சதவிகித மக்களும், பிடித்த சில விஷயங்கள் இருக்கிறது என 28 சதவிகிதத்தினரும், ரொம்ப பிடிக்கும் என 7 சதவிகித மக்களும் கருத்து கூறியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்  கட்சி ஆரம்பித்த கமல் மீதும் மக்களின் வெறுப்பு வெளியாகியுள்ளது. ஆமாம் 27 சதவிகித மக்கள் கமலின் செயல்பாடுகளை வெறுப்பதாக வாக்களித்துள்ளார்கள். சில விஷயங்கள் மட்டும் அவரிடம் பிடிக்கவில்லை என 37 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். கமலின் செயல்பாடுகள் எங்களுக்கு பிடிக்கும் என  28 சதவிகிதத்தினரும், கமல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என 7 சதவிகித மக்களும் கூறியுள்ளனர். 

பாமகவை பொறுத்தவரை 32 சதவிகித மக்கள் வெறுப்பதாகவும், அவர்கள் மீதான சில விஷயங்களால் பிடிக்கவில்லை என 40 சதவிகித மக்களும், அவர்களின் செயல்பாடுகள் சில பிடிக்கும் என 22 சதவிகித மக்களும், ரொம்ப பிடிக்கும் 6 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.

ஆளும் தேசியக்கட்சியான பாஜக மீது 35 சதவிகித மக்கள் வெறுப்பையும், சில விஷயங்களால் அவர்கள் பிடிக்காது என 40 சதவிகித மக்களும், பாஜகவின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில்  நடந்த விஷயங்கள் பிடிக்கும் என 20 சதவிகித மக்களும், ரொம்ப ரொம்ப பிடிக்கும் 5 சதவிகித மக்களும் கருத்து கூறியுள்ளனர். 

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரனின் செயல்பாடுகள் எங்களுக்கு பிடிக்கவேயில்லை என 32 சதவிகித மக்களும், அவரிடம் உள்ள சில விஷயங்கள் பிடிக்காது என 43 சதவிகித மக்களும், தினகரனின் அரசியல் செயல்பாடுகள் எங்களுக்கு பிடிக்கும் என 20 சதவிகிதத்தினரும், ரொம்ப பிடிக்கும் என 5 சதவிகிதத்தினரும் வாக்களித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் குறித்து மக்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு சர்வே ரிசல்ட் சொல்வது தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் மீது  வைத்துள்ள மதிப்பையும் மக்களின் மனநிலையை வெளிப்படையாக காட்டுகிறது. என்ன தான் ரஜினி கமல் போன்ற உச்ச சினிமா நட்சத்திரங்கள் இதுவரை அரசியலில் இல்லை என்றாலும் தற்போது களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு இணையாக விருப்பு வெறுப்பை மக்கள் காட்டியுள்ளனர்.

click me!