மக்களே உஷார்.. இந்திய பெருங்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களில் மிதமான மழை..!

Published : Dec 22, 2020, 01:28 PM IST
மக்களே உஷார்.. இந்திய பெருங்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களில் மிதமான மழை..!

சுருக்கம்

தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டியிருக்கும். 

டிசம்பர் 22 ஆம் தேதி, குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!