
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்காக நீதிவிசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி ஓபிஎஸ் அணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றுள்ளார்.இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்த கொண்டுள்ளனர்.
இதே போன்று மாவட்ட தலைநகரங்கள், புதுச்சேரி, காரைக்கால் என மொத்தம் 36 இடங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ் பங்கேற்றுள்ளார்.
இந்த போராட்டத்தை ஓபிஎஸ் அணியின் தளபதி என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அவர்கள் துவக்கி வைத்தார். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே இங்கு காட்சியளித்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டைமாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் போராட்டம் நடந்து கொண்டிருந்த போதிலும் இந்த போராட்டதிலும் பல்லாயிரக்கண்கானோர் கலந்த கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேரூந்து நிலையம் அருகே மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன் தலைமையில் சிவிஎன்.குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரனை வேண்டும்
என்று மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் அதனால் சிபிஐ கோரி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ , எஸ்பி சண்முகநாதன் தலைமையில் 1000 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று மதுரை, தஞ்சாவூர், நெல்லை, உட்பட தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினரின் நடத்தி வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு அலை அலையாய் திரளும் கூட்டத்தைப் பார்த்து ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சசிகலா அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.