ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.அவசியமில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம். பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்

By Thiraviaraj RMFirst Published Mar 19, 2020, 9:08 PM IST
Highlights

சீனாவை புரட்டி எடுத்த கொரோனா உலக நாடுகளையெல்லாம் புரட்டி எடுத்துவரும் நிலையில் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் இருந்து...

T.Balamurukan

சீனாவை புரட்டி எடுத்த கொரோனா உலக நாடுகளையெல்லாம் புரட்டி எடுத்துவரும் நிலையில் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் இருந்து...

Latest Videos

1.65வயது உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
2.ஓவ்வொரும் 10 பேரை  தொடர்பு கொண்டு கொரோனா ஊரடங்கு  பற்றி  விழிப்புணர்வு விளக்கம் கொடுக்க வேண்டும்.
3.சாதாரண அறுவை சிகிச்சை ஒரு மாதம் தள்ளிப்போட வேண்டுகோள்.. மருத்துவமனை விமானநிலையங்களில் பணியாற்றுவோருக்கு நாடு கடமைப்பட்டுள்ளது.
4.வர இருக்கும் சில வாரங்களில் மட்டும் மக்கள் விழிப்புணர்வுடனும் சுய ஊரடங்கு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்றைய பயிற்சி நாளைய சவாலை எதிர்கொள்ள உதவும்.
5.இன்றைய சூழ்நிலை சாதாரணமானது அல்ல.
6.சாதாரண பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு யாரும் செல்லவேண்டாம்.மிகவும்  தேவைப்பட்டால் போனில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
7.கொரோனா கொள்ளை நோயால் பொருளாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. இதன் சரிவை சரிசெய்ய நிதியமைச்சர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.


8.வரஇருக்கும் சிலவாரங்களில் மட்டும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
9.முன்பெல்லாம்  போர்க்காலத்தில் இரவில் விளக்குகளை அணைத்து இருட்டடிப்பு செய்யப்படும். விளக்கின்றி வசிப்பதற்கு அவ்வப்போது பயிற்சிகள் தரப்படும். போர்காலம் போன்றதொரு கட்டுப்பாட்டை தற்போது எதிர்பார்த்துள்ளேன்.
10.மக்களின் சுய  ஊரடங்கு குறித்து அனைத்து அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
11.நமது முயற்சிகள் சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
12.  2 முக்கிய அம்சங்களை கைப்பிடிக்கவவேண்டும். மார்ச் 22ல் காலை 7மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை  மக்கள் கடைபிடிக்க வேண்டும். நமக்காக உழைப்பவர்களுக்கு மார்ச்22ம் தேதி மாலை 5நிமிடம் நன்றி செலுத்த வேண்டும்.
13.நமது முயற்சிகள் சுயகட்டுப்பாட்டை பறைசாற்றுவதாக இருக்க வேண்டும்.
14.ஊடனடியாக நடவடிக்கை எடுத்த நாடுகளில் பததிப்பு இல்லை.


15.குறைந்த வருவாய் நடுத்தர வருவாய் உயர்வருவாய் பிரிவில் உள்ள அனைவருமே பாதிப்பு
16.கொரோனா தொற்றால் பாதிக்கும் சூழலில் பலர் பணியாற்றி வருகின்றனர்.
17.அவசியபணிகள் மற்றும் மருத்துவ சேவைகள் மீதான சுமை வரும்  நாட்களில் அதிகரிக்கும். 

click me!