
கலங்கி போன ஜெயந்தி பத்மநாபன்
சசிகலா ஆதரவு குடியாத்தம் தொகுதி பெண் எம்எல்ஏக்கு, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை வலுப்படுத்தி வருகின்றனர் .
தமிழக முதல்வராக பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது . இதனை தொடர்ந்து , நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து வாக்களித்தார் ஜெயந்தி பதமநாபன் .
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை நிரூபித்ததால் , முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில், ‘ தமிழகத்தின் கருப்பு தினம் பிப்ரவரி 18” என்ற தலைப்பில், குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனை கண்டித்து துண்டு பிரசுரங்கள் குடியாத்தம் தொகுதி முழுவதும் மக்களிடையே வெகுவாக பரவி வருவதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதப்படும் தருவாயில், எப்படி சசிகலா ஆதரவு எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என, ஜெயந்தி பத்மநாபனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளிடையே , எம்எல்ஏ அலுவலகம் வந்தார் ஜெயந்தி பத்மநாபன் என்பது குறிப்பிடத்தக்கது