வீதிக்கு வந்து அமைதி போராட்டம் நடத்திய மக்கள் ...! விஜயபாஸ்கருக்கு எதிராக போர்க்கொடி

 
Published : Feb 17, 2017, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
வீதிக்கு வந்து அமைதி  போராட்டம்  நடத்திய மக்கள் ...!  விஜயபாஸ்கருக்கு எதிராக  போர்க்கொடி

சுருக்கம்

வீதிக்கு வரும் மக்கள் :

சசிகலாவிற்கு  தண்டனை   கிடைத்து  தற்போது பெங்களூரு  ஆக்ரஹாரா  சிறையில்  இருந்தாலும்,  அவருக்கு  ஆதரவாக பெரும்பான்மையான  எம்எல் ஏக்கள்  உள்ளனர். இந்நிலையில்,  தற்போது   தமிழக  முதல்வராக  பங்கேற்றுள்ள  எடப்பாடி  பழனிசாமி , நாளை சட்டப்பேரவையில்  பெரும்பான்மை  நிரூபிக்க  வேண்டிய  நிலையில் உள்ளார். அதாவது  ஒபிஎஸ் அணிக்கும், எம்எல்ஏக்கள்  ஆதரவு  இருக்கும் தருவாயில், நாளை  யார்  ஆட்சியை  பிடிப்பார்கள் என்ற  எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது.

மக்கள் கருத்து :

எம்எல்ஏக்கள் ஆதரவு  இருந்தாலும்,  மக்கள்  சசிகலா வழி முறையில்  அமையும்  ஆட்சியை  விரும்பாத  போக்கே  காணப்படுகிறது.  இதனை  உறுதி செய்யும் விதமாக , ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எந்தளவு எழுச்சி இருந்ததோ அதே அளவு எழுச்சியுடன் சசிகலாவிற்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் துவக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மக்கள் இன்று  அமைதி  போராட்டம் செய்தனர்.இந்நிலையில்  நாளை  என்ன  நடக்க  போகிறதோ  என்ற  எதிர்பார்ப்பு  மக்கள்  மத்தியில் பெரும் பரவலாக  காணப்படுகிறது.  

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு