இந்த 15 மாவட்ட மக்களும் மிக கவனமாக இருக்க எச்சரிக்கை..!! தாக்குதல் கொடூரமாக இருக்ககூடும் உஷார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2020, 1:42 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 26 டிகிரி  செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் சிவகாசி, (விருதுநகர்), 7 சென்டி மீட்டர் மழையும், மலையூர் (புதுக்கோட்டை) 6 சென்டி மீட்டர் மழையும், திருமயம் (புதுக்கோட்டை) 5 சென்டி மீட்டர் மழையும் குடுமியான்மலை (புதுக்கோட்டை) கலெக்டர் ஆபீஸ் திருப்பூர்  (திருப்பூர்) தலா 4 சென்டிமீட்டர் மழையும், துறையூர் (திருச்சி)  மானாமதுரை (சிவகங்கை) ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை) மேட்டுப்பட்டி (மதுரை) திருப்பத்தூர், திருபுவனம், (சிவகங்கை) பொன்னேரி (திருவள்ளூர்) திருப்பட்டூர், திருப்பூர், நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்) அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா மூன்று சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 20ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 21-22 ஆகிய தேதிகளில் தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கடலோரப் பகுதிகள் மத்திய மேற்கு வங்க கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 23ம் தேதி தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

click me!