தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..!!

Published : Dec 19, 2020, 02:06 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..!!

சுருக்கம்

வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வடமாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும், வடமாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் ஒட்டியிருக்கும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்சம் வெப்பநிலை 23 டிகிரி செல்சியசையும் ஒட்டியிருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் 13 சென்டிமீட்டர் மழையும், திருப்பூண்டி (நாகப்பட்டினம்) பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், தலைஞாயிறு (நாகப்பட்டினம்) வேதாரண்யம் (நாகப்பட்டினம்) திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 6 சென்டி மீட்டர் மழையும், அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 5 சென்டி மீட்டர் மழையும், குடவாசல் (திருவாரூர்) காரைக்கால் (புவனகிரி) கடலூர் தலா 4 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடம் (நாகப்பட்டினம்) புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி) மண்டபம் (ராமநாதபுரம்) சீர்காழி (நாகப்பட்டினம்) தல 3 சென்டி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது. 

வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!