மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மக்களே உஷார்..!! அடுத்த 48 மணி நேரத்திற்கு கொஞ்சம் பாதுகாப்பா இருங்க..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2020, 1:20 PM IST
Highlights

மேலும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக  கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) திருமயம் (புதுக்கோட்டை) 5 சென்டி மீட்டர் மழையும், உசிலம்பட்டி (மதுரை) ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தல 4 சென்டிமீட்டர் மழையும், ஆலங்குடி புதுக்கோட்டை 3 சென்டிமீட்டர் மழையும், மதுரை விமானநிலையம் (மதுரை) முத்துப்பேட்டை (திருவாரூர்) சிவகிரி (தென்காசி)  தளி (கிருஷ்ணகிரி) ஜெயங்கொண்டம் (அரியலூர்) தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

 

click me!