மக்களே நாளை முதல் கடற்கரைக்கு போக வேண்டாம்.. நடைபயிற்சி சங்கங்கள் எடுத்த அதிரடி முயற்சி.

Published : Apr 19, 2021, 02:02 PM IST
மக்களே நாளை முதல் கடற்கரைக்கு போக வேண்டாம்.. நடைபயிற்சி சங்கங்கள் எடுத்த அதிரடி முயற்சி.

சுருக்கம்

நாளை முதல் கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று முக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.  

நாளை முதல் கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று முக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன் படி நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரையை பொறுத்தவரையில் வியாபாரம் செய்வோர், சுற்றுலா பயணிகள், பொழுதுபோக்கிற்கு வருபவர்களை தாண்டி நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி, தேகப்பயிற்சி செய்வோருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சென்னையில் முக்கிய கடற்கரைகளான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நேரங்களில் இளைஞர்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். 

மேலும், நடைப்பயிற்சி செய்வோரில் சரிபாதிக்கும் மேல் முதியவர்கள் இருப்பதால் அவர்களுக்கு கோரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால் நடைப்பயிற்சி சங்கங்கள் சார்பில் இன்றே கடற்கரைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!