தீபாவளி கொண்டாடும் மக்களே இதை கேட்டுக்குங்க..!! 1000 ரூபாய் அபராதம்... 6 மாதம் சிறை, போலீஸ் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2020, 12:04 PM IST
Highlights

அப்படி இல்லையெனில் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
 

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

சுற்றுப்புற சூழல் தொடர்ந்து  மாசடைந்து வருவதன் எதிரொலியாக வெப்பமயமாதல் அதிகரித்து சுற்றுச் சூழலியல் தலைகீழாக மாறும் அபாயத்திற்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு மாசுபாடுகளை தவிர்க்க வேண்டும் என உலக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலையில் 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என வெரும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே  கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும்  அப்படி இல்லையெனில் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். 

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது 6 மாத சிறை தண்டனையோ விதிக்கப்பட நேரிடும் என போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே இதை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட சுமார்  497  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

 

click me!