மக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது.? 65 கிலே மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கை.

Published : Jun 12, 2021, 03:32 PM ISTUpdated : Jun 12, 2021, 03:34 PM IST
மக்களே உஷார்.. அடுத்த 5 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது.? 65 கிலே மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கை.

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (12-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

வடக்கு வங்ககடல் அதனை ஒட்டிய ஒடிசா  மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  அது வலுப்பெற கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு (12.06.2021 முதல் 16.06.2021 வரை)  பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும்,  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வை மையம் எச்சரித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (12-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு (13-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): சோலையார் (கோவை) 2 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை), அவலாஞ்சி  (நீலகிரி), வால்பாறை  (கோவை), தேவலா  (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம்  (கோவை) தலா  1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை : வங்கக் கடல் பகுதிகள் 12.06.2021  முதல் 14.06.2021 வரை : வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55  கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12.06.2021   முதல் 15.06.2021 வரை : தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 

அரபிக்கடல் பகுதிகள்: 12.06.2021 முதல் 16.06.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.12.06.2021 முதல் 16.06.2021  வரை: அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!
மண்டை காய்ச்சலில் திமுக- அதிமுக..! அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்..! 2026- தேர்தலில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!