மக்களே எச்சரிக்கை.. அடுத்த 2 நாட்களில் தொற்று அதிகரிக்கும்.. அமைச்சர் அதிர்ச்சி தகவல்..

By Ezhilarasan BabuFirst Published Jan 17, 2022, 2:51 PM IST
Highlights

மேலும், பொங்கல் விடுமுறை என்பதால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் மொத்தம் 73 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது என்றார். 

பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போட்டால்தான்  நமக்கு நிம்மதி ஏற்படும் என அவர் கூறியுள்ளார். 

சென்னை தாம்பரம் சித்தா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக  100 படுக்கைகள் கொண்ட தனி பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலையின் பொது 77 இடங்களில் சித்தா கொரொனா சிகிச்சை தொடங்கப்பட்டது. அதில் 68,000 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள் என்ற அவர், சென்னை, கோவை திருப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டத்தில் 1436 படுக்கைகள் கொண்ட சித்தா சிகிச்சை மையங்களில் உள்ளது அதேபோல, 155 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேதம் சிகிச்சை மையங்கள் உள்ளது. மொத்தமாக 1591 சித்தா மருத்துவ படுக்கைகள் தாயார் நிலையில் உள்ளது என்றார். 

ஒமைக்ரான் தொற்று வீரியம் குறைவாகவே இருந்தால் கூட பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது என்ற அவர், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தோற்ற பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. இன்று கொரொனா தொற்று பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், தொடர் விடுமுறையின் காரணமாக இன்னும் 2 நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாள்தோறும் தொற்றின் பாதிப்பு 2000 அளவிற்கு உயர்ந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. 

தடுப்பூசி போட தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் 9.10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றார். மேலும், 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்களாக இருக்கும் நிலையில்  81 ஆயிரம் பேருக்கு தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அது 10 லட்சமாக மாறிவிடும் அதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் உடனடியாக வந்த தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், பொங்கல் விடுமுறை என்பதால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் மொத்தம் 73 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது என்றார். மேலும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியில் பின்தங்கி இருக்கிறது அந்த இரண்டு மாவட்டங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார். 

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்

இரண்டாம் அலையின் பொது 77 சித்தா மையங்கள் அமைக்கப் பட்ட நிலையில் இந்த ஆண்டு மூன்றாம் அலையில் பொது 100 சித்தா மையங்கள் அமைக்க இருக்கிறோம். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான பிரிவை பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதை புகைப்படம் எடுத்து வட மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி இதைபோல அங்கும் மையம் அமைக்க தெரிவிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

குழந்தைகளுக்கான தனி சிகிச்சை மையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டாலும் தற்போது குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வில்லை என்றார். தடுப்பூசி போடும் போது மக்கள் இயக்கமாகவே தமிழகத்தில் மாறியுள்ளது. தமிழகத்தில் 88 % முதல் தவணை தடுப்பூசி, 64% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனால் 100 சதவீதம் இன்னும் எட்டவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது. 100 சதவீதம் எட்டினால் தான் நமக்கு நிம்மதி ஏற்படும் என்றார். மேலும், பொதுமக்கள் கொரொனா பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனை வர வேண்டாம்.  வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வரவேண்டும் என தெரிவித்தார். 

click me!