இந்த வலியிலும் திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு..! அப்படிப்பட்ட மகத்தான காரணம் இதுதானாம்..!

First Published Jul 29, 2018, 11:55 PM IST
Highlights
people appreciating dmk family for kalaignar photo


இந்த வலியிலும் திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு..! அப்படிப்பட்ட மகத்தான காரணம் இதுதானாம்..!

கலைஞர் அவர்களின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளது.. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தொடர்ந்து அறிக்கை  வந்துக் கொண்டிருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் கோடான கோடி மக்கள் வரை காவேரி மருத்துவமனை அருகே கூடி  உள்ளனர்

தொண்டர்களை அப்புறப்படுத்தும் வேளையில் காவல் துறையினர் இறங்கி இருந்தாலும் கட்டுக்கு அடங்காத கூட்டம் அங்கு கூடி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேவை இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆ ராசா அவர்களும் கலைஞர் உடல் நலம் தேறி வருகிறது  என மைக் மூலம் தொண்டர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார்.

கலைஞர் கருணாநிதி குடும்பத்தினரின்.....

மூடுமந்திரம் இல்லாத ...வெளிப்படையான இந்த செயல் போற்றுதற்குரியது...

செல்வி. ஜெயலலிதா அம்மா அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்திருதால் அவரது சிகிச்சையும் இப்படி வெளிப்படை தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம்..
ஏன்காப்பாற்றபட்டு இருக்க. pic.twitter.com/a810gXBjKO

— joseph ravi (@pjrvaldaris)

இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்படவில்லை. இயற்கையாக அவர் சுவாசிக்கிறார் என ஒரு புகைப்படத்தையும் ஆதாரமாக வெளியிட்டது திமுக

கருணாநிதி அவர்களின் இன்றைய புகைப்படம் மூலம் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது

Pulse rate 94
Saturation 97
Respiratory rate 30 ( 15-18 இருந்தால் நன்று)

கடைசியாக உள்ள மூச்சு விடுதல் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படலாம்.

மற்றபடி உதிப்பார் உதயசூரியனாய் !! pic.twitter.com/RR9q9blMJx

— Manoj Prabakar S (@imanojprabakar)

இதனை கண்ட தொண்டர்கள் பொதுமக்கள் என பெரும்பாலோனோர், கலைஞரின் உடல் நிலை குறித்து உண்மைதன்மையை திமுக குடும்பத்தினர் ஆதாரமாக வெளியிட்டு உள்ளதற்கு பல்வேறு தரப்பினர்  பாராட்டு மழை தெரிவித்து உள்ளனர்.

இப்படி ஒருமுறையாவது அம்மா அவர்களை காட்டி இருக்கலாம்😢

சல்யூட் திமுக 🙏 pic.twitter.com/sWgGHrIAOt

— Hari Prabhakaran (@HariIndic)

இந்த வலியிலும், திமுக குடும்பத்தினருக்கு பாராட்டு ஒருபக்கம்  இருக்க, இதே போன்று ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படத்தையாவாது அப்போதே வெளியிட்டு இருக்கலாமே என கருத்து தெரிவித்து உள்ளனர்

click me!