மக்களே உஷார்... அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் மழை.. வானிலை ஆய்வுமையம் தகவல்.

Published : Mar 09, 2021, 02:27 PM IST
மக்களே உஷார்... அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழக  கடலோர பகுதிகளில் மழை.. வானிலை ஆய்வுமையம் தகவல்.

சுருக்கம்

குமரிக்கடல் பகுதியில்  ஒரு கிலோமீட்டர் உயரத்தில்  நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக 09.03.2021 இன்று தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

மேலும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்றும், 10.03.2021 முதல் 13.03.2021 வரை: தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. 

ஏனைய மாவட்டங்கள் மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் அதன்பிறகு தெளிவாகவும் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு , பாபநாசம்  தலா  2 சென்டிமீட்டர் மழையும், கன்யாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், கன்யாகுமரி, நாகர்கோயில்  தலா 2 சென்டிமீட்டர் மழையும் , சித்தார்  1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 
 
PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?