வீரர்களுக்கும், காளைகளுக்கும் PCR கொரோனா பரிசோதனை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2021, 3:34 PM IST
Highlights

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளனர்.

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர், துணை முதல்வர் பச்சை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் ஜல்லிகட்டு போட்டிகள் ஜன-14 அவனியாபுரத்திலும், ஜன-15 பாலமேட்டிலும், ஜன-16ல் அலங்காநல்லூரிலும் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,  மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், DSP ஆனந்த் ஆரோக்கியராஜ்,  வட்டாட்சியர் பழனிக்குமார் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், கால்நடை மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தொடர்ந்து பார்வையாளர்கள் அமரும் கேலரி, காளைகள் நிறுத்தப்படும் இடம், மாடுபிடிவீரர்கள் நிற்குமிடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளனர். ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை பதிவு செய்யும் நாளான 11ம்  தேதி அவனியாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், பாலமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்வது 9ம் தேதி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரிலும் வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வும்  பரிசோதனை நடைபெற்று சான்றிதழ் வழங்கப்படும்.

வீரர்களுக்கும், காளைகளுக்கும் PCR கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும்இதில் தகுதி பெற்றவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் மணிக்கு 75 வீரர்கள் வீதம் மொத்தம் 8 சுற்றாக 300 வீரர்களுக்கு மிகாமல் போட்டியில் அனுமதி அளிக்கப்படும், பார்வையாளர்கள் தனி மனித இடைவெளியிடன்,  கட்டாயம் முக கவசம் அணிந்து வந்தால் தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். 

ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும்  பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரு ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகள் மற்றோடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை என விழா குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள சாத்தியார் அணை பொங்கலோ பொங்கல் என பொங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!