எந்த கட்சியிலும் நடக்காத ஒன்று மதிமுகவில் நடந்துள்ளது.. சிலர் வெளியேறுவதால் கட்சி பிளவுபடாது.. வைகோ சரவெடி.!

By vinoth kumarFirst Published Oct 22, 2021, 6:29 PM IST
Highlights

அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும், நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரிக்கு தகுதிக்கு வந்துவிட்டது. மேடையிலும் நன்றாக பேசுகிறார். 

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியது தொடர்பாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ;- துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே அவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு? என்று கேட்டார்கள். தேர்தல் நடப்பதை போல வாக்குப் பெட்டி வாங்கி ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வையாபுரி, மதிமுகவிற்கு வரவேண்டுமென்று வாக்களித்தனர்.

எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில்தான் நடைபெற்றது. கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவரை மாவட்டச் செயலாளர்கள் வரவேற்று அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் எனக் கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. 

அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும், நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரிக்கு தகுதிக்கு வந்துவிட்டது. மேடையிலும் நன்றாக பேசுகிறார். அரசியலில் விமர்சனங்கள் வருவது சகஜம். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்கின்றனர். சில பேர் கட்சியை விட்டுச் செல்வதால் கட்சி பிளவுபடும் என்பதல்ல. தொடர்ந்து வலுவாகவே உள்ளது. வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத சிலர் வாட்ஸ் அப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார். 

click me!