எடப்பாடிக்கு குட்பாய்... டி.டி.வி.தினகரன் ஓகே... அதுக்குள்ளேயா...? அந்தர் பல்டி அடித்த கருணாஸ்..!

By vinoth kumarFirst Published Feb 25, 2019, 5:25 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் டி.டி.வி. தினகரன் விரும்பினால் கூட்டணிக்கு தயார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் டி.டி.வி. தினகரன் விரும்பினால் கூட்டணிக்கு தயார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

வருகிற மக்களவை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் தேமுதிக, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் எடப்பாடி அரசை கடுமையாக விமர்சித்து வந்த கருணாஸ் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். அதிமுக ஆட்சிக்கு 5 வருடம் முழுவதுமாக ஆதரவு அளிப்பேன் என்று அதிரடியாக அறிவித்தார். 

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த எம்.எல்.ஏ. கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ’’கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே. இதேபோன்று கடந்த மாதம் வரை பாமக தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.  

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரைவைக்காவிட்டால், வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்குலத்தோர் சமுதாய மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார். தினகரனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று வருகிறார். மத்திய பாஜக அரசு தினகரனை திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்கமாட்டோர். 

கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என கூறிவந்த கருணாஸ் தற்போது தினகரன் விரும்பினால், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க தயாராக உள்ளேன் என்ற கூறியுள்ளார். 

click me!