தென் சென்னையில் டி.ஆர். பாலு போட்டி? திமுகவில் சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

By Asianet TamilFirst Published Jan 21, 2019, 9:39 AM IST
Highlights

தஞ்சாவூரில் போட்டியிட டி.ஆர். பாலு விரும்புகிறார். ஆனால், இந்த முறை தென் சென்னையில் டி.ஆர். பாலுவை திமுக மேலிடம் களமிறக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் தென் சென்னையில் திமுக தோல்வியடைந்ததால், பலமான வேட்பாளரை நிறுத்த இந்த ஏற்பட்டை திமுக செய்யலாம் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். ஆனால், டி.ஆர். பாலுவின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இது  நடக்கும் என்கிறார்கள் திமுகவினர். 

திமுக சார்பில் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் யாரெல்லாம் போட்டியிடக்கூடும் என்ற பட்டிமன்றம் திமுக தொண்டர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.

சென்னையில் உள்ள மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளை எந்தக் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்காமல் திமுகவே போட்டியிடுது வழக்கம்.  இந்த முறையும் இந்த மூன்று தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட உள்ளது. ஆனால், இந்த முறை சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் ஆர்வமாகப் பேசப்பட்டு வருகிறது. 

மத்திய சென்னையில் வழக்கம்போல தயாநிதி மாறன் களமிறங்குவார் என்றே திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், தென் சென்னை, வட சென்னையில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த முறை தென் சென்னை தொகுதியிலும், அதற்கு முன்பு வட சென்னை தொகுதியிலும் போட்டியிட்ட டி.கே.எஸ். இளங்கோவன் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டதால், அவரது இடத்தில் யார் போட்டிடுவார்கள் என்ற ஆர்வம் திமுகவினர் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இரண்டு முறை வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், கடந்த முறை தென்  சென்னைக்கு மாற்றப்பட்டார். 

ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான வழக்கறிஞர் கிரிராஜன் வட சென்னை தொகுதியில் நிறுத்தப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கொளத்தூரில்தான் இவரது வீடு உள்ளது. எனவே இந்த முறையும் கிரிராஜன் வட சென்னையில் வாய்ப்பு கிடைக்கும் என்று திமுக தொண்டர்கள் அடித்து சொல்கிறார்கள். இதேபோல வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவனும் வட சென்னையில் நிற்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை இளங்கோவன் அரக்கோணம் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.  இவர்களில் யாருக்காவது ஒருவருக்கே வட சென்னையில் சீட்டு கிடைக்கும் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். 

கடந்த காலங்களில் தென் சென்னையில் டி.ஆர். பாலு தொடர்ச்சியாக வென்று காட்டினர். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தொகுதிகள் மாறியதால் தென் சென்னையை விட்டு ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூருக்கு மாறினார் டி.ஆர். பாலு. 2009-ல் ஸ்ரீபெரும்புதூரில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டி.ஆர். பாலு, 2014-ல் தஞ்சாவூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

இந்த முறையும் தஞ்சாவூரில் போட்டியிட டி.ஆர். பாலு விரும்புகிறார். ஆனால், இந்த முறை தென் சென்னையில் டி.ஆர். பாலுவை திமுக மேலிடம் களமிறக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் தென் சென்னையில் திமுக தோல்வியடைந்ததால், பலமான வேட்பாளரை நிறுத்த இந்த ஏற்பட்டை திமுக செய்யலாம் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். ஆனால், டி.ஆர். பாலுவின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இது  நடக்கும் என்கிறார்கள் திமுகவினர். 

click me!