கேப்டன் கோஷ்டியை டோட்டலாக கைகழுவிய தமிழகம்... பிய்ந்து போன பிரேமலதா கெத்து..!

By Vishnu PriyaFirst Published May 24, 2019, 10:44 AM IST
Highlights

2019 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் மிக மிக மோசமான அடியை சந்தித்திருக்கின்றன. அதிலும் மக்களால் அநியாயத்துக்கு தூக்கி எறியப்பட்ட கட்சியாக மாறியிருக்கிறது தே.மு.தி.க. விஜயகாந்துக்கு கொஞ்ச நஞ்சமாக மக்களிடம் ஒட்டியிருந்த செல்வாக்கையும் அவரது குடும்பத்தினர் கெடுத்து, சிதைத்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர் விமர்சகர்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் மிக மிக மோசமான அடியை சந்தித்திருக்கின்றன. அதிலும் மக்களால் அநியாயத்துக்கு தூக்கி எறியப்பட்ட கட்சியாக மாறியிருக்கிறது தே.மு.தி.க. விஜயகாந்துக்கு கொஞ்ச நஞ்சமாக மக்களிடம் ஒட்டியிருந்த செல்வாக்கையும் அவரது குடும்பத்தினர் கெடுத்து, சிதைத்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர் விமர்சகர்கள்.

உடல் நலன் நலிவுற்ற நிலையில் விஜயகாந்தின் இயக்கமும், பேச்சும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இந்தியாவில் கிடைத்த மருத்துவம் பத்தாத நிலையில், தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமளவுக்கு விஜயகாந்தின் நிலை தளர்ந்தது. இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் இங்கே நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கியது. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்தது  பி.ஜே.பி. தமிழகத்தில் கூட்டணி தலைவன் எனும் முறையில் அ.தி.மு.க.வோ ’விஜயகாந்த் வந்தால்தான் கூட்டணி பற்றி பேசமுடியும். அவருக்கு மட்டுமே உங்கள் கட்சியில் செல்வாக்கு.’ என்றனர். 

இதனால் அடித்துப் பிடித்து அமெரிக்காவிலிருந்து கேப்டனை அழைத்து வந்தார் பிரேமலதா. ஆனால் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து, சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் தங்கள் வீட்டுக்கு கூட செல்ல உடல் ஒத்துழைக்காத நிலையில், ஏர்போர்ட்டிலேயே படுத்து தூங்கினார் விஜயகாந்த். அதிர்ந்து போனது அ.தி.மு.க. பெரும் இழுபறிக்குப் பின் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணிக்குள் நுழைந்தது தே.மு.தி.க. தங்கள் கட்சியின் செல்வாக்கு நிலை கடந்த எல்லா தேர்தல்களிலுமே மிக மிக மோசமாக அடிபட்டு கிடக்கும் உண்மை தெரிந்தும், கூட அதை  வெளிக்காட்டுக் கொள்ளாமல், ஓவராய் பேசினார் பிரேமலதா. 

போதாக்குறைக்கு அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனின் பேச்சு தான் தோண்றித்தனமாக, தடித்த வார்த்தைகளில் இருந்தது. இதுவும் பத்தாது என்று, விஜயகாந்தை மேக்-அப் போட்டு உட்கார வைத்து ‘ஸ்பெஷல் பேட்டி’ எனும் பெயரில் ஒரு சீனை போடனர். அதில் ‘தி.மு.கா கூட்டணி தோக்கும், அ.தி.மு.கா. கூட்டணி ஜெயிக்கும்’ என்று விஜயகாந்த் வாயசைக்க, டப்பிங்கெல்லாம் கொடுத்து இட்டுக் கட்டினர். பிரசார களங்களில் தெனாவெட்டாக பேசியதோடு மட்டுமில்லாமல், சில இடங்களில் கூட்டணிக்கே குண்டு வைக்குமளவுக்கு பேசி குழப்பங்களை உருவாக்கினார் பிரேமலதா.

 

இந்நிலையில் நேற்று வெளியான ரிசல்ட்டின் மூலம் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியிருக்கிறது தே.மு.தி.க. சுத்தமாக கேப்டனின் செல்வாக்கை மக்கள் துடைத்து எறிய, அவரது குடும்பத்தினர் காரணமாகி போயுள்ளனர். பா.ம.க.வுக்கும் இதே நிலைதான். ஆனால் புத்திசாலித்தனமாக முதலிலேயே ஒரு ராஜ்யசபாசீட்டை மகனுக்காக வாங்கி வைத்திருக்கிறார் ராமதாஸ். ஆனால் லோக்சபாவில் களமிறங்கி, மத்தியமைச்சர் கனவிலிருந்த சுதீஷுக்கு வழக்கம்போல் தோல்வி மட்டுமே பரிசாகி இருக்கிறது. பிரேமலதாவின் ‘கெத்து’ வெத்து வேட்டாகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆங்!

click me!