நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாகிறது..! வேலுார் தொகுதியோடு நடத்த திட்டம்..!

Published : May 24, 2019, 10:31 AM ISTUpdated : May 24, 2019, 10:34 AM IST
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாகிறது..! வேலுார் தொகுதியோடு நடத்த திட்டம்..!

சுருக்கம்

கன்னியாகுமரி மக்களளவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். 

கன்னியாகுமரி மக்களளவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். 

மக்கள் பிரதிநிதி ஒருவர் இரு அதிகாரப் பகுதிகளை வகிக்க முடியாது என்பதால், வசந்தகுமார் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் இத்தொகுதி காலியாகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வென்றன. 

இந்த வெற்றி மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்கிறது. அரசுக்கு ஆபத்து இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எச்.வசந்தகுமார் சட்டசபை சபாநாயகரை சந்தித்து, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை முறைப்படி வழங்குவார் எனத் தெரிகிறது. அதன்பிறகு அத்தொகுதி காலியானதாக அதிகாரபுர்வமாக அறிவிக்கப்படும். 

பொதுவாக காலியாக அறிவிக்கப்படும் சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விதி உள்ளது. ஏற்கனவே தேர்தல் முறைகேடு காரணமாக வேலுார் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலுார் தொகுதியோடு சேர்த்து நாங்குநேரி தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!