கஜாவால் கஜகஜா... மீ்ண்டும் #Gobackmodi கோஷம்... பதற்றத்தில் பாஜக?

By vinoth kumarFirst Published Dec 21, 2018, 1:49 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் 100 இடங்களில் பிரசசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

ஜனவரி முதல் வாரத்தில் மோடி தனது பிரசாரத்தை துவக்க உள்ளார். ஜனவரி 6-ம் தேதி கேரளா செல்லும் மோடி, அங்கு 3 நாள் பிரச்சார கூட்டங்களில் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 27-ம் தேதி மோடி தமிழகம் வர உள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைமை தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் 3 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள மற்றும் பேரணியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை அல்லது வேலூரில் பிரச்சார கூட்டத்தை நடத்த பா.ஜ.க. ஆலோசித்து வருகிறது.  

கடந்த முறை ராணுவ நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது #Gobackmodi என்ற ஹஸ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் இருந்தது அனைவரும் அறிந்ததே.  இந்த முறை கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வர வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் இவர் இதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் அவர் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் போது பலத்த எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுவதால் அவரின் இந்த பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

click me!